2570-வது ஸ்ரீ புத்த ஆண்டு அரச வெசாக் பெருவிழா, எதிர்வரும் 2026 மே 27 அன்று மாத்தறை, திஹகொட மிடெல்லாவல புராதனக் கோயில் வளாகத்தில் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவின்படி, மே 27 முதல் ஜூன் 2 வரை “வெசாக் வாரமாக” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் ஆன்மீகம், ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன:
மே 27 – அரச வெசாக் விழா: மாத்தறையில் ஆரம்பம் மற்றும் தீவு தழுவிய தொடக்க நிகழ்ச்சிகள்.
மே 28 – ஆரோக்கியமான வாழ்க்கை: இலவச மருத்துவ, இரத்த தான மற்றும் கண் சிகிச்சை முகாம்கள்.
மே 29 -நன்னடத்தை ஊக்குவிப்பு: போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மற்றும் சிரமதானப் பணிகள்.
மே 30 -அனுசரிப்பும் தியானமும் (போயா): முழுமையான சமய தினமாக அனுசரிப்பு (இசை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படும்).
மே 31 – துறவியர் பயிற்சி: பிரிவெனா மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்.
ஜூன் 01 – ஆன்மீக அபிவிருத்தி: தர்ம உபதேசங்கள் மற்றும் தியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.
ஜூன் 02 -சுற்றுச்சூழல் பாதுகாப்பு: “தூய்மையான இலங்கை” திட்டத்தின் கீழ் மரம் நடுதல் மற்றும் தூய்மைப் பணிகள்.
இந்த வாரத்தில் அனைத்து நிறுவனங்களும் தத்தமது பகுதிகளில் சசன ரக்ஷக மண்டலங்களின் வழிகாட்டலின் கீழ் அர்த்தமுள்ள நிகழ்ச்சிகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.