பண்டிகைக் காலத்தையொட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீட்டு முறை, இன்று (ஏப்ரல் 18) நள்ளிரவு முதல் மீண்டும் கட்டாயமாக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.
ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த முறை, இன்று நள்ளிரவு முதல் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.
பெட்ரோல் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டு அளவுகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி. ஜெ. ராஜகருண தெரிவித்துள்ளார்.
ஒற்றை மற்றும் இரட்டை வாகனப் பதிவு இலக்க முறையின் கீழ் (Odd/Even System), QR குறியீட்டைப் பயன்படுத்தி மட்டுமே இனி எரிபொருள் விநியோகிக்கப்படும்.
பண்டிகைக் கால பயணங்களுக்காக வழங்கப்பட்ட தளர்வு இன்றுடன் நிறைவடைவதால், வாகன உரிமையாளர்கள் மீண்டும் QR முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.