BREAKING NEWS

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு!

AD
admin in உலகம்
Report

ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் ஈரான் – அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 7 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை கடந்த ஒரு எண்ணெய் டேங்கர் மற்றும் கொள்கலன் கப்பல் மீது ஈரானியப் படைகள் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின் தடையை மீற முயன்ற ஈரானியச் சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கப் படைகள் அதிரடியாகச் சிறைபிடித்ததாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை 90 டொலருக்கும் கீழ் இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, இன்று திங்கட்கிழமை 94.69 டொலராக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் இன்று நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தையைப் புறக்கணிப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் “அதிகப்படியான கோரிக்கைகளே” இதற்குக் காரணம் என ஈரான் கூறியுள்ளது.

உலக எண்ணெய் விநியோகத்தில் 20% நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால், உலகெங்கிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்த மோதல் நீடித்தால் புதன்கிழமையுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும். இதனால் உலக நாடுகள் தங்களின் அவசரகால எரிபொருள் இருப்பை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. அதேவேளை, இத்தனை பதற்றங்களுக்கு மத்தியிலும் ஆசியப் பங்குச் சந்தைகள் இன்று சற்று உயர்வுடனேயே காணப்படுகின்றன.