இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (22) பிற்பகல் 1:00 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும், அம்பாறை, குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. க்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலை வேளையிலேயே மழை பெய்யக்கூடும்.
மன்னார் முதல் கொழும்பு, காலி வழியாக ஹம்பாந்தோட்டை வரையான பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும்.
மத்திய, சபரகமுவ, வடமத்திய மாகாணங்கள் உட்பட காலி, மாத்தறை, களுத்துறை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் காலையில் மூடுபனி நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகள் பொதுவாக அமைதியாக இருக்கும். இருப்பினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.