BREAKING NEWS

இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை!

AD
admin in வானிலை
Report

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அடுத்த 24 மணித்தியாலங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (12) காலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புத்தளத்தில் ஆரம்பித்து கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 20 – 30 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடற்பரப்புகளில் காற்றின் வேகம் திடீரென அதிகரிக்கக்கூடும். அத்தகைய சந்தர்ப்பங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் கடற்றொழில் மற்றும் கடற்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.