BREAKING NEWS

இலங்கைக்கு நேரே உச்சி வெயில்: இன்று முதல் 15 ஆம் திகதி வரை அவதானம்!

AD
admin in உள்ளூர் செய்திகள்
Report

சூரியனின் தற்காலிக வடக்கு நோக்கிய நகர்வு காரணமாக, இன்று (ஏப்ரல் 05) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கையின் வான்பரப்பில் சூரியன் உச்சியில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று நண்பகல் 12:13 க்கு , தொடங்கொட, ரத்கம, யக்கலமுல்ல, அக்குரஸ்ஸ, முல்கிரிகல, ரன்ன, களமெட்டிய மற்றும் உஸ்ஸன்கொட போன்ற பகுதிகளுக்கு நேராக சூரியன் உச்சியில் அமையும்.

சூரியன் உச்சிக்கு வரும் வேளையில், நிலத்தில் நேரடியாகப் படும் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். எனவே, முற்பகல் 11:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரையான காலப்பகுதியில் நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்த்து, போதுமான அளவு நீர் அருந்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.