இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, நாட்டின் சில பகுதிகளில் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும், நுவரெலியா மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வரண்ட வானிலையே நிலவும்.
வரும் ஏப்ரல் 20-ஆம் திகதி முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை அதிகரிப்பதற்கான சாதகமான சூழல் காணப்படுகிறது.
மன்னார் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்.
காற்று தென்கிழக்கு திசையிலிருந்து அல்லது திசை மாறியும் மணிக்கு 20-30 கி.மீ. வேகத்தில் வீசும்.
சாதாரணமாக கடல் அமைதியாகக் காணப்படும். இருப்பினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அந்த நேரங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் காலங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சாதாரணமாக கடல் அமைதியாகக் காணப்படும். இருப்பினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அந்த நேரங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.