BREAKING NEWS

“சிக்காடா” (Cicada) எனும் புதிய கொவிட் திரிபு!

AD
admin in உள்ளூர் செய்திகள்
Report

23 நாடுகளில் வேகமாகப் பரவி வரும் ‘சிக்காடா’ (Cicada – BA.3.2) எனும் புதிய கொவிட்-19 திரிபு குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

2024 இறுதியில் கண்டறியப்பட்ட இந்தத் திரிபு, தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

காய்ச்சல், இருமல், சோர்வு மற்றும் தசை வலி போன்ற அறிகுறிகள் இதில் காணப்படுகின்றன.

இதுவரை இலங்கையில் இந்தத் திரிபு பதிவாகவில்லை. இருப்பினும், சர்வதேசப் பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை கண்காணிப்பு தொடர்கிறது.