BREAKING NEWS

ஊர் திரும்பும் மக்களுக்காக விசேட பேருந்து, புகையிரத சேவைகள் ஆரம்பம்!

AD
admin in உள்ளூர் செய்திகள்
Report
ஊர் திரும்பும் மக்களுக்காக விசேட பேருந்து, புகையிரத சேவைகள் ஆரம்பம்!

சித்திரை புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, சொந்த இடங்களிலிருந்து மீண்டும் பணித்தலங்களுக்குத் திரும்பும் பயணிகளின் வசதிக்காக இன்று (15) பிற்பகல் முதல் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வழிகாட்டலில், மாகாணங்களுக்கு இடையே மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அலுவலக இரயில்கள் வழமை போல் இயங்குவதுடன், பயணிகளின் நெரிசலைக் குறைக்க விசேட இரயில்களும் இணைக்கப்பட்டுள்ளன.

தனியார் பேருந்து சேவைகள் இன்று 30% என்ற அளவில் குறைந்த அளவிலேயே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 9 முதல் நேற்று வரை இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) 600 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த 4 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக 196.1 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மக்களின் வருகை இன்று பிற்பகல் முதல் அதிகரிக்கும் என்பதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.