BREAKING NEWS

அவுஸ்திரேலியா செல்லும் மகளிர் U19 கிரிக்கெட் அணி!

AD
admin in விளையாட்டு
Report

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான முக்கோணத் தொடரில் (Tri-Series) பங்கேற்பதற்காக, 15 வீராங்கனைகள் அடங்கிய இலங்கை கிரிக்கெட் அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) அறிவித்துள்ளது.

இத்தொடரில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய பலம் வாய்ந்த அணிகளுடன் இலங்கை இளையோர் மகளிர் அணி மோதவுள்ளது.

இலங்கை அணி இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு T20 போட்டிகள் என மொத்தம் ஆறு போட்டிகளில் விளையாடவுள்ளது.

போட்டிகள் ஏப்ரல் 7, 8, 12, 13, 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளன.

இத்தொடருக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணி நாளை (ஏப்ரல் 03) அவுஸ்திரேலியா நோக்கிப் பயணிக்கவுள்ளது.