BREAKING NEWS

“யாழ்ப்பாணத்தின் 5 பகுதிகளில் உச்சம் கொடுக்கும் சூரியன்!”

AD
admin in வானிலை
Report

சூரியனின் வருடாந்த வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இலங்கைக்கு மேலாக சூரியன் நேர் உச்சியில் நிலைபெறும் நிகழ்ச்சி இன்றுடன் (15) நிறைவடைகின்றது.

இன்று நண்பகல் 12:10 க்கு பண்டத்தரிப்பு,தெல்லிப்பழை,வறுத்தலைவிளான்,வசாவிளான்,மணற்காடு போன்ற பகுதிகளுக்கு நேர் மேலே சூரியன் நிலைபெற்றிருக்கும்.

சூரியனின் இந்த வடக்கு நோக்கிய நகர்வு காரணமாகக் கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்கு மேலாகச் சூரியன் உச்சம் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.