BREAKING NEWS

“10 நாட்களைக் கடந்த ‘LIK’ – இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?”

AD
admin in சினிமா
Report

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘Love Insurance Kompany’ (LIK) திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் 10 நாட்களை நிறைவு செய்துள்ளது.

கடந்த 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை நயன்தாரா மற்றும் லலித் குமார் இணைந்து தயாரித்திருந்தனர். அனிருத்தின் துள்ளலான இசை, க்ரித்தி ஷெட்டி மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் மிரட்டலான வில்லன் நடிப்பு எனப் படம் பல நட்சத்திரப் பட்டாளங்களைக் கொண்டிருந்தது. இவர்களுடன் சீமான், மாளவிகா மற்றும் யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

அறிவியல் புனைகதை கலந்த வித்தியாசமான கதைக்களத்தை விக்னேஷ் சிவன் கையாண்டிருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இதன் தாக்கம் வசூலிலும் எதிரொலிப்பதாகத் தெரிகிறது.

பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படமான ‘லவ் டுடே’ ஏற்படுத்திய தாக்கத்தோடு ஒப்பிடுகையில், ‘LIK’ படத்தின் வசூல் சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. எனினும், வரும் நாட்களில் வசூல் வேகம் எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.