BREAKING NEWS

லெபனான் மீது இஸ்ரேல் உக்கிரத் தாக்குதல்: ஒரே நாளில் 254 பேர் பலி – தேசிய துக்க தினம் அறிவிப்பு!

AD
admin in உலகம்
Report

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்களில், ஒரே நாளில் 254 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,165-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய மாதங்களில் நிகழ்ந்த மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுவதால், லெபனான் அரசு நாடு தழுவிய அளவில் தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் இந்த கொலை இயந்திரத்தை நிறுத்த, லெபனானின் அனைத்து அரசியல் மற்றும் இராஜதந்திர வளங்களையும் அரசாங்கம் திரட்டி வருகிறதாக லெபனான் பிரதமர் நவாப் சலாம் தெரிவித்தார்.

தாக்குதலில் காயமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், லெபனானின் மருத்துவமனைகள் பல அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளன. எனவே லெபனான் சுகாதார அமைச்சர் ரகான் நஸரெதீன் சர்வதேச சமூகத்திடம் அவசர உதவி கோரியுள்ளார்.

நாட்டின் சுகாதார அமைப்பு சீர்குலையும் நிலையில் இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட போதிலும், இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது.எனினும் அந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்றும், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ், லெபனானில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக வொஷிங்டன் ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை என அவர் உறுதிப்படுத்தினார்.

ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி விதிமுறைகள் தெளிவாக உள்ளன” என்று குறிப்பிட்ட போதிலும், போர்நிறுத்தமா அல்லது இஸ்ரேல் மூலமான தொடர் போரா? என்பதை அமெரிக்கா தான் முடிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

“இரண்டையும் ஒரே நேரத்தில் அமெரிக்கா கொண்டிருக்க முடியாது” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.