BREAKING NEWS

இலங்கையின் அடுத்த பிரபலம் யார்? தேடும் முயற்சியில் லசித் மாலிங்க!

AD
admin in உள்ளூர் செய்திகள்
Report
இலங்கையின் அடுத்த பிரபலம் யார்? தேடும் முயற்சியில் லசித் மாலிங்க!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் லசித் மாலிங்க, நாட்டின் எதிர்கால வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டறியும் நோக்கில் புதியதொரு பாரிய திட்டத்தை அறிவித்துள்ளார். சமூக வலைதளங்கள் ஊடாகத் திறமையான இளைஞர்களைக் கண்டறிவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

முதல் 22 வயதுக்குட்பட்ட, வேகப்பந்து வீச்சில் ஆர்வமுள்ள 300 இளைஞர்களுக்கு முதற்கட்டமாக வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இன, மத பேதமின்றி நாட்டின் அனைத்துப் பகுதி இளைஞர்களும் இதில் கலந்துகொள்ளலாம்.

கடின பந்து (Leather ball) போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்க வேண்டிய அவசியமில்லை. திறமை இருப்பின் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.

தகுதியுள்ள இளைஞர்கள், தங்களின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பயிற்சிக்குத் தேவையான காலணிகளுடன் (பந்துவீச்சு மற்றும் ஓட்டப் பயிற்சிக்கான காலணிகள்) வருகை தர வேண்டும்.

காலணிகள் இல்லாத திறமையான வீரர்களுக்கு, அந்த இடத்திலேயே காலணிகள் வழங்கப்படும் என மாலிங்க நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க விரும்பும் இளைஞர்களுக்கு இதுவொரு பொன்னான வாய்ப்பாகும்.