லங்கா ஐஓசி (Lanka IOC) நிறுவனம் தனது எரிபொருள் வகைகளின் விலையை இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய விலைகள் (ஒரு லீற்றர்):
XtraMile Diesel: ரூ. 551-லிருந்து ரூ. 590-ஆக அதிகரிப்பு.
Lanka Super Diesel: ரூ. 572-லிருந்து ரூ. 600-ஆக அதிகரிப்பு.
Xtra Green Diesel: ரூ. 588-லிருந்து ரூ. 620-ஆக அதிகரிப்பு.
அதேவேளை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) எரிபொருள் நிலையங்களில் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாட்டில் இருவேறு நிறுவனங்கள் வெவ்வேறு விலைகளில் எரிபொருளை விற்பனை செய்வது வாகன உரிமையாளர்களிடையே குழப்பத்தை உருவாக்கியுள்ளது.