BREAKING NEWS

ஈரான் அணுமின் நிலையங்களுக்கு ஆபத்து?

AD
admin in உலகம்
Report

ஈரானின் புஷெர் (Bushehr) அணுமின் நிலையத்திற்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதல்கள், பாரிய அணுசக்தி விபத்தை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார்.

அணுமின் நிலையம் அருகே விழுந்த ஏவுகணையால் கட்டிட இடிபாடுகள் சரிந்து பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இத்தகைய தாக்குதல்கள் பல தலைமுறைகளை அழிக்கக்கூடிய சுகாதாரப் பேரழிவை உருவாக்கும் என தலைவர் டெட்ரோஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

2.5 இலட்சம் மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள இந்த நிலையம், ஈரானின் மிக முக்கியமான அணுசக்தி மையமாகும்.