BREAKING NEWS

ஈரானியக் கப்பல் மீதான தாக்குதல்: “இது திட்டமிட்ட படுகொலை!” – தூதுவர் அலிரேசா அதிரடி.

AD
admin in உள்ளூர் செய்திகள்
Report

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) ஈரானிய போர்க்கப்பலான ‘IRIS Dena’ மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து, இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) அதிரடி உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

‘IRIS Dena’ கப்பல் அத்துமீறி இலங்கைக்குள் நுழையவில்லை. இலங்கை அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், ஒரு நட்பு ரீதியிலான பயணமாகவே இங்கு வந்தது.

தாக்குதலில் பலியான 104 ஈரானியர்களும் ஆயுதம் ஏந்திய போர்வீரர்கள் அல்ல; அவர்கள் ஒரு ‘இசைக்குழுவைச்’ (Music Band) சேர்ந்தவர்கள். போர்க்களத்திலிருந்து 1,100 மைல்களுக்கு அப்பால், தற்காப்புத் திறனற்ற ஒரு கப்பல் மீது அமெரிக்கா நடத்திய இந்தத் தாக்குதல் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரானது.

இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக அமெரிக்கா எந்தவிதமான எச்சரிக்கையையும் விடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மக்கள் எவ்வித நெருக்கடியையும் சந்திப்பதை ஈரான் விரும்பவில்லை. இலங்கை கேட்டால் எரிபொருள் (Oil) மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஈரான் இப்போதும் தயாராக இருப்பதாக அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேலும், தாக்குதலில் தப்பிப்பிழைத்த மாலுமிகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய மனிதாபிமான உபசரிப்புகளுக்கு அவர் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.