BREAKING NEWS

“எண்ணெய் வேண்டுமா? கேளுங்கள் தருகிறோம்!” – இலங்கைக்கு ஈரான் பகிரங்க அழைப்பு.”

AD
admin in உள்ளூர் செய்திகள்
Report

இலங்கை எப்போது கோரிக்கை விடுத்தாலும், மசகு எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்க ஈரான் தயாராக உள்ளது” என இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய எரிசக்தி நெருக்கடியைத் தீர்க்கத் தேவையான உதவிகளை வழங்க ஈரான் முன்வந்துள்ளது.

தனது நட்பு நாடுகளுக்காக ‘ஹோர்முஸ் நீரிணையை’ (Strait of Hormuz) ஈரான் ஒருபோதும் மூடவில்லை என்பதை அலிரேசா டெல்கோஷ் தெளிவுபடுத்தினார்.

இலங்கை மக்கள் எவ்வித சிரமங்களையும் எதிர்கொள்வதை ஈரான் விரும்பவில்லை எனவும், இலங்கை எப்போதும் ஈரானால் மதிக்கப்படும் நாடு எனவும் குறிப்பிட்டார்.

ஈரானில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் எவரேனும் நாடு திரும்ப விரும்பினால், அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கவும் ஈரான் அரசாங்கம் தயாராக உள்ளது.