BREAKING NEWS

“அமைதிக்கான நடைபயணம்!” – ஏப்ரல் 21 இல் ஆரம்பம்.

AD
admin in உலகம்
Report

அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச “அமைதிக்கான நடைபயணம்” (Walk for Peace), எதிர்வரும் ஏப்ரல் 21 முதல் 28 வரை இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

சமூகத்தில் அமைதி மற்றும் அன்பை மேம்படுத்துவதே இந்த 7 நாள் ஆன்மீக நடைபயணத்தின் பிரதான நோக்கமாகும்.

ஏப்ரல் 21 ஆம் திகதி அனுராதபுரத்தில் ஆரம்பித்து தம்புள்ளை, கண்டி வழியாக ஏப்ரல் 28 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தை வந்தடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நடை பயணத்தின் போது ஜய ஸ்ரீ மகா போதியின் புனித மரக்கன்று மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

நிறைவு நாளான இந்த மாதம் 28, 29 ஆம் திகதிகளில் கங்காராம விகாரையில் இலங்கையின் பௌத்த மற்றும் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் அடங்கிய விசேட கண்காட்சியும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமையவுள்ள பௌத்த கல்வி மையத் திட்டத்திற்கு இலங்கையின் பௌத்த மரபுகளைப் பங்களிப்பதே இந்த நடை பயணத்துக்கான பின்னணியாகும்.