எதிர்வரும் ஏப்ரல் 29 முதல் மே 12 வரையான காலப்பகுதியில் வெப்பநிலை 45°C முதல் 55°C வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு குடிமைப் பாதுகாப்பு ஆணையம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை சூரிய வெப்பம் மிகத் தீவிரமாக இருக்கும் என்பதால், அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெப்பம் காரணமாக வாகனங்கள் தீப்பற்றும் அபாயத்தைத் தவிர்க்க எரிவாயு கொள்கலன்கள், லைட்டர்கள், வாசனை திரவியப் (Perfume) பாட்டில்கள்,குளிர்பானப் பாட்டில்கள் மற்றும் மின்கலத்தில் இயங்கும் சாதனங்கள் போன்றவற்றை உடனடியாக அகற்றவும்.
வாகனத்தின் எரிபொருள் தொட்டியை (Fuel Tank) முழுமையாக நிரப்ப வேண்டாம்; மாலை வேளையில் எரிபொருள் நிரப்புவது சிறந்தது.
டயர்களில் அதிகளவு காற்று நிரப்புவதைத் தவிர்க்கவும். காற்றோட்டத்திற்காக கார் ஜன்னல்களைச் சிறிது திறந்து வைக்கவும்.
வெப்பம் தாங்க முடியாமல் பாம்புகள் மற்றும் தேள்கள் குளிர்ந்த இடங்களைத் தேடி வீடுகளுக்குள் வரக்கூடும் என்பதால் அவதானமாக இருக்கவும்.
மின்சார அளவையர்களில் அதிக சுமை (Load) ஏற்றுவதைத் தவிர்க்கவும். ஏசி (AC) வெப்பநிலையை 24–25°C இல் வைத்திருப்பது சிறந்தது.
அதிக வெப்பமடைந்து கைபேசி வெடிக்கும் அபாயம் உள்ளதால், வெயிலில் அதன் பயன்பாட்டைக் குறைக்கவும்.
போதியளவு தண்ணீர் மற்றும் திரவ ஆகாரங்களை உட்கொள்ளவும்.
மூச்சுத்திணறல் அல்லது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடவும்.
நேரடி சூரிய ஒளியில் வேலை செய்பவர்கள் ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் ஒருமுறை 30 நிமிடங்கள் ஓய்வு எடுக்கவும்.