ஈரான் உடனான போர்நிறுத்தத்தை அமெரிக்கா காலவரையின்றி நீடிப்பதாக அறிவித்துள்ளதை அடுத்து, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
கடந்த செவ்வாயன்று கடும் சரிவைச் சந்தித்திருந்த தங்கம், இன்று புதன்கிழமை ஒரு அவுன்ஸிற்கு 0.9% உயர்ந்து 4,755.11 டொலராக வர்த்தகமாகிறது.
போர்நிறுத்தம் காலாவதியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் வகையில் இந்த நீட்டிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
போர் மேகங்கள் தணிந்ததால் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளது. இது பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வு குறித்த அச்சத்தை குறைத்துள்ளது.
வெள்ளியின் விலை 1.5% உயர்ந்து ஒரு அவுன்ஸ் 77.84 டொலராகவும், பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் விலைகளும் உயர்வு கண்டுள்ளன.
பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு அரணாக தங்கம் கருதப்பட்டாலும், வட்டி விகித மாற்றங்கள் அதன் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனினும், தங்கம் மீண்டும் ஒரு சாதனை உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.