BREAKING NEWS

பலத்த மழை வாய்ப்பு – மக்களுக்கு அவதானம்

AD
admin in Latest Updates
Report

இன்று (14) பிற்பகல் 1:00 க்குப் பிறகு தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட அளவில் மிதமான முதல் பலத்த மழை பெய்யக்கூடும்.

அதிகாலை நேரங்களில் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களை குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சூரியன் வடக்கு நோக்கி நகரும் தோற்றம் காரணமாக, இவ்வருடம் ஏப்ரல் 05 முதல் 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் அமைவுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இன்று மதியம் சுமார் 12:10 அளவில் நாவலடி, பரந்தன், முரசுமோடை, வெள்ளிக்கண்டல், உடப்பட்டுக்கண்டல், புளியம்பொக்கனை ஆகிய பகுதிகளின் மேல் சூரியன் நேராக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.