BREAKING NEWS

டுபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்!

AD
admin in உலகம்
Report
டுபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்!

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இன்று (16) அதிகாலை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலால் அங்கிருந்த ஒரு எரிபொருள் தொட்டி தீப்பிடித்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று டுபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து அவசர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு கருதி டுபாய் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது நிலைமை சீரடைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன