BREAKING NEWS

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு :ட்ரம்ப்பின் உரையே காரணம்

AD
admin in Latest Updates
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தொடர்பாக வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. 

முக்கிய கடல் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் தடைகள் விரைவில் நீங்கும் என்ற எதிர்பார்ப்பு ட்ரம்ப்பின் உரையின் மூலம் தகர்க்கப்பட்டதே இதற்கு காரணமாகும். 

ஜனாதிபதி உரை தொடங்குவதற்கு முன்னர் ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) கச்சாய் எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலராக காணப்பட்டது. 

உரையின் போது விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்ட போதிலும், இறுதியில் அது சுமார் 4% இனால் அதிகரித்து, தற்போது ஒரு பீப்பாய் 105.38 டொலர் உயர்ந்துள்ளது. 

உலகின் மொத்த எரிசக்தி தேவையில் சுமார் 20% இந்த குறுகிய கடல் வழிப்பாதை ஊடாகவே கொண்டு செல்லப்படுவதால், இது உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. 

கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்தக் கடல் வழிப்பாதையைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்ததையடுத்து, நிலைமை இன்னும் முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை. 

ஆட்சி மாற்றம் அல்லது ஈரானின் உட்கட்டமைப்புகளை அழிப்பது குறித்து ட்ரம்ப் விடுத்த கடுமையான எச்சரிக்கைகள், விநியோகச் சங்கிலிக்கு மேலும் அச்சுறுத்தலாக அமையும் என முதலீட்டாளர்கள் அஞ்சுவதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.