BREAKING NEWS

இலங்கைக்கு உதவும் சீனா! – சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் கப்பலை வழங்க இணக்கம்.

AD
admin in உள்ளூர் செய்திகள்
Report

இலங்கைக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளைத் தாங்கிய கப்பலொன்றை வழங்குவதற்குச் சீன அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், சீனா இந்த விசேட எரிபொருள் கப்பலை வழங்கவுள்ளது.

இது தொடர்பான மேலதிக ஏற்பாடுகள் மற்றும் எரிபொருள் விநியோகம் குறித்து ஆராய்வதற்காக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுக்கும் சீனத் தரப்பினருக்கும் இடையில் நாளை (ஏப்ரல் 06) விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.

இலங்கையின் எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வாகவும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு வலுசேர்க்கும் வகையிலும் இந்த உதவி அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.