BREAKING NEWS

“எண்ணெய் விலை 150 டொலரைத் தாண்டினால் கடும் வீழ்ச்சி!-பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை.

AD
admin in உலகம்
Report

கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 150 டொலரை எட்டினால், அது உலகளாவிய ரீதியில் பாரிய பொருளாதார வீழ்ச்சியை (Global Recession) ஏற்படுத்தும் என உலகின் மிகப்பெரிய நிதி முகாமைத்துவ நிறுவனமான ‘பிளாக்ராக்’ (BlackRock) தலைவர் லாரி ஃபிங்க் (Larry Fink) எச்சரித்துள்ளார்.

ஈரான் ஒரு அச்சுறுத்தலாக நீடித்து, கச்சா எண்ணெய் விலை உயர்விலேயே இருந்தால், அது உலகப் பொருளாதாரத்தில் “ஆழமான தாக்கங்களை” ஏற்படுத்தும் என பிபிசி-க்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறிப்பிட்டார்.

“மத்திய கிழக்கின் மோதல்கள் முடிவுக்கு வந்தால் விலை குறையலாம். மாறாக, மோதல் நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளுக்கு எண்ணெய் விலை 100 முதல் 150 டொலர் வரை நீடிக்கக்கூடும். இது ஒரு செங்குத்தான பொருளாதார வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்,” என அவர் சுட்டிக்காட்டினார்.

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் ஒரு ‘குமிழி’ (Bubble) இருப்பதாகத் தான் கருதவில்லை எனத் தெரிவித்த அவர், புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மக்கள் அதிகளவில் தொழில்நுட்பப் பயிற்சிகளை (Technical Training) பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சுமார் 14 டிரில்லியன் டொலர் மதிப்பிலான சொத்துக்களைக் கையாளும் பிளாக்ராக் நிறுவனத்தின் இந்த எச்சரிக்கை, சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.