BREAKING NEWS

நிலவை நெருங்கும் Artemis II!

AD
admin in உலகம்
Report

மனித வரலாற்றில் புதிய மைல்கல்லாக, நாசாவின் Artemis II விண்கலம் நிலவை நோக்கிய தனது பயணத்தின் பாதி தூரத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ளது. தற்போது இந்த விண்கலத்தில் பயணிக்கும் நான்கு விண்வெளி வீரர்களைத் தவிர, பூமியிலிருந்து இவ்வளவு தொலைவில் வேறு எந்த மனிதனும் இல்லை.

நிலவைச் சுற்றி வந்து மீண்டும் பூமிக்குத் திரும்பும் இந்தச் வரலாற்றுப் பயணத்தில், விண்கலம் தற்போது பாதியை எட்டியுள்ளது.

விண்கலத்திற்கும் பூமிக்கும் இடையிலான வானொலி மற்றும் லேசர் சமிஞ்சைகள், நிலவின் ஈர்ப்பு விசையினால் தடுக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் சுமார் 40 நிமிடங்கள் பூமியுடனான அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்படும்.

அந்த 40 நிமிடங்களில், விண்வெளியின் அடர்ந்த இருளில் அந்த நான்கு வீரர்கள் மட்டும் தங்களின் சொந்த உணர்வுகள் மற்றும் சிந்தனைகளுடன் தனிமைப்படுத்தப்படுவர். இது ஒரு மிகச்சிறந்த மௌனத் தருணமாகக் கருதப்படுகிறது.

தற்போது டெக்சாஸின் ஹூஸ்டன் கட்டுப்பாட்டு மையத்துடன் விண்கலம் தொடர்பில் இருந்தாலும், நிலவின் மறைவுப் பகுதிக்குச் செல்லும்போது ஏற்படும் இந்தத் தற்காலிகத் தொடர்புத் துண்டிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.