BREAKING NEWS

நிலவை நோக்கிப் பாயும் ‘ஆர்டெமிஸ் II’

AD
admin in உலகம்
Report

வரலாற்றுச் சிறப்புமிக்க நிலவுப் பயணத்தில், பூமிக்கும் நிலவிற்கும் இடையிலான பாதியளவு தூரத்தைக் கடந்துள்ள ஆர்டெமிஸ் II (Artemis II) விண்கலக் குழுவினர், அங்கிருந்து பூமியின் உயர்ரகப் புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளனர்.

விண்கலத்தின் கட்டளை அதிகாரி ரீட் வைஸ்மேன் எடுத்த இந்தப் புகைப்படத்தில், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் துருவங்களில் ஒளிரும் பச்சை நிற ‘அரோரா’ (Aurora) ஒளிப்பிழம்புகள் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளன.

1972-ஆம் ஆண்டிற்குப் பிறகு, மனிதர்கள் முதன்முறையாக பூமியின் சுற்றுவட்டப் பாதையைத் தாண்டிப் பயணிக்கும் வரலாற்றுச் சாதனையை இக்குழுவினர் நிகழ்த்தியுள்ளனர்.

ஏவப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின், பூமிக்கும் நிலவிற்கும் இடையிலான சுமார் 228,500 கி.மீ தூரத்தை விண்கலம் கடந்துள்ளது. இத்தருணத்தைக் குழுவினர் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்ட ஆர்டெமிஸ் II, வரும் ஏப்ரல் 6-ஆம் திகதி நிலவின் மறுபக்கத்தைக் கடந்து, ஏப்ரல் 10-ஆம் திகதி பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கவுள்ளது.

1972-ஆம் ஆண்டு ‘அப்பல்லோ 17’ குழு எடுத்த புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டுள்ள நாசா, “விண்வெளியில் இருந்து பார்க்கும்போது நமது பூமி இன்னும் பேரழகுடனேயே காட்சியளிக்கிறது” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளது.