BREAKING NEWS

அனிருத்தின் ஆட்டத்தில் அதிரப்போகும் உலகக்கிண்ணம் 

AD
admin in Latest Updates
Report
அனிருத்தின் ஆட்டத்தில் அதிரப்போகும் உலகக்கிண்ணம் 

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான ஐசிசி (ICC) ஆண்களுக்கான டி20 உலகக்கிண்ணத் தொடர் குறித்த விறுவிறுப்பான செய்தி வெளியாகியுள்ளது. 

இந்த மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவிற்கான உத்தியோகபூர்வ உலகக்கிண்ணப் பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வெளியிடவுள்ளார். 

இளையதலைமுறையினர் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களைக் கவரும் வகையில் இப்பாடல் மிக விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே பல ஹிட் பாடல்களைத் தந்துள்ள அனிருத், முதல்முறையாக உலகக்கிண்ணத் தொடர் ஒன்றுக்கு இசையமைக்கவுள்ளமை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக, இலங்கையிலும் இப்போட்டிகள் நடைபெறவுள்ளதால் இலங்கை ரசிகர்களும் இந்த அறிவிப்பால் உற்சாகமடைந்துள்ளனர்.