ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் பந்துவீச்சை வலுப்படுத்தும் வகையில், இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீச பத்திரன அந்த அணியில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை கிரிக்கெட் சபை நடத்திய கட்டாய உடற்தகுதி சோதனையில் பத்திரன வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையிடமிருந்து விளையாடுவதற்கான தடையில்லாச் சான்றிதழ் (NOC) பத்திரனவுக்கு விரைவில் கிடைக்கவுள்ளது.
வரும் செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முக்கியப் போட்டிக்கு முன்னதாக மதீச பத்திரன கொல்கத்தா அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பந்துவீச்சில் சவால்களை எதிர்கொண்டு வரும் கொல்கத்தா அணிக்கு, பத்திரனவின் வருகை பெரும் பலமாக அமையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.