BREAKING NEWS

கொழும்பில் நாளை முதல் மீண்டும் வாகன தரிப்பிடக் கட்டணம் அறவீடு.

AD
admin in Latest Updates
Report

கொழும்பு மாநகர எல்லைக்குள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன தரிப்பிடக் கட்டணங்கள், நாளை (23) திங்கட்கிழமை முதல் மீண்டும் அறவிடப்படும் என கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபையின் நிதி நிலைக்குழு எடுத்த தீர்மானத்திற்கு அமைய, நாளை காலை 6.00 மணி முதல் வாகன தரிப்பிட முகாமைத்துவம் மற்றும் கட்டண அறவீட்டுப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நிலவிய நீண்ட வாகன வரிசைகள் மற்றும் பாரிய போக்குவரத்து நெரிசல் காரணமாக, கடந்த 18ஆம் திகதி முதல் வாகன தரிப்பிடக் கட்டணங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

எரிபொருள் விநியோகத்திற்காக QR குறியீடு மற்றும் வாகன இலக்கத் தகடு முறைகள் (Number plate based fuel distribution) சீராக நடைமுறைப்படுத்தப்படுவதால், வீதிகளில் நிலவிய நெரிசல் தற்போது குறைவடைந்துள்ளது. இதன் காரணமாகவே, வழமையான தரிப்பிடக் கட்டண முறையை மீண்டும் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.