BREAKING NEWS

சிங்கர் நிறுவனத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு: கிளை முகாமையாளர் உயிரிழப்பு

AD
admin in Breaking
Report
சிங்கர் நிறுவனத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு: கிளை முகாமையாளர் உயிரிழப்பு

அம்பலாங்கொடை: அம்பலாங்கொடை காலி வீதியில் அமைந்துள்ள சிங்கர் (Singer) காட்சிப்படுத்தல் அறைக்குள் இன்று (22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், அதன் கிளை முகாமையாளர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த விபரங்கள்: குறித்த முகாமையாளர் இன்று காலை பணிக்குச் சமூகமளித்திருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திலேயே முகாமையாளர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.