BREAKING NEWS

எரிபொருள் QR நடைமுறையில் மீண்டும் சிக்கல்!

AD
admin in உள்ளூர் செய்திகள்
Report
எரிபொருள் QR நடைமுறையில் மீண்டும் சிக்கல்!

இலங்கையில் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (National Fuel Pass) QR நடைமுறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, ஆயிரக்கணக்கான வாகன உரிமையாளர்கள் தமக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ள முடியாது பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

பயன்படுத்தப்பட்ட (Second-hand) வாகனங்களை வாங்கியவர்கள், புதிய QR குறியீட்டைப் பதிவு செய்ய முற்படும்போது, அந்த வாகனம் இன்னும் பழைய உரிமையாளரின் பெயரிலேயே இருப்பதாக இணையத்தளம் காட்டுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட வாகனங்களின் பழைய உரிமையாளர்களைத் தொடர்புகொள்வது தற்போது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளதால், புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாமல் உரிமையாளர்கள் தவிக்கின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சைத் தொடர்புகொள்ள முயன்றாலும், முறையான பதில்கள் கிடைப்பதில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிக்காத அதிகாரிகள், “தற்போது பேச முடியாது” என்ற தானியங்கி குறுஞ்செய்திகளை மாத்திரமே அனுப்புவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, QR குறியீட்டைப் பெற்றுத் தருவதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் போலி காணொளிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பச் சிக்கலால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளும், வாகன உரிமையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்களும் ஏற்பட்டு வருகின்றன.