விளையாட்டு

தமிழின் பெருமை.. மலேசியாவே ஆடிப் போச்சு.. மெய்சிலிர்க்க வைத்த தமிழக சிலம்ப வீரர்களின் உலக சாதனை .

சென்னை : மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்பாட்டம் தொடரில் தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 40 பதக்கங்களை வென்று தமிழின் பெருமையை பறை சாற்றி இருக்கினர்.தமிழ்நாட்டின் பண்டைய கால கலையான சிலம்பாட்டம் இந்த தலைமுறை மாணவர்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், மலேசியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சிலம்பாட்ட தொடரைப் போன்றே இந்த ஆண்டும் சிறப்பாக செயல்பட்ட தமிழக வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை அள்ளினர். 5 தங்கம், 23 இந்த தொடரில் இந்தியா மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் இடம் பெற்றனர். இந்த தொடரில் உலக சாதனை செய்யும் முயற்சியாக 160 தமிழக வீரர், வீராங்கனைகள் இணைந்து ஒரே போட்டியில் சேர்ந்து ஈடுபட்டனர். சுமார் 10 கிலோ மீட்டருக்கு சிலம்பத்தை முன் பக்கமும், பின் பக்கமும் சுழற்றிச் சென்றனர். இந்த நிகழ்வு மட்டுமே சுமார் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெற்றது. இது மலேசியாவின் சோழன் சாதனைப் புத்தகத்தில் ஒரே இடத்தில் அதிக சிலம்ப வீரர்கள் ஒன்று கூடிய நிகழ்வாக இடம் பெற்றது.

இந்த தொடரில் நான்கு நாடுகளில் இருந்து 600 வீரர்கள் பங்கேற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து இடம் பெற்றவர்கள் மட்டுமே 40 பதக்கங்களை வென்றனர். சென்னை விமான நிலையத்தில் பதக்கம் வென்று நாடு திரும்பிய தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்ட கூட்டமைப்பு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Back to top button