5 வீதிகள் ஊடாக கொழும்புக்கு பஸ்கள் பயணிக்காது

0
10

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து சேவைகளை நாளை முதல் ஆரம்பிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றிற்கு

ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுகாதார பிரிவினரால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய இந்த சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்படி, போக்குவரத்து ஆணைக்குழுவில் நேற்று சில தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

01.ஐந்து வீதிகளின் ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பஸ்கள் கொழும்பிற்குள் பிரவேசிக்காது.

02.கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை நிட்டம்புவ வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.

03.கொழும்பு – 05 மார்க்கத்தின் ஊடாக பயணிக்கின்ற மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை, மினுவங்கொடை வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.

04.காலி வீதியில் பயணிக்கின்ற மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை, பாணந்துறை வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.

05.அவிசாவளை ஊடாக புதிய மற்றும் பழைய வீதிகளின் ஊடாக கொழும்பிற்குள் பிரவேசிக்கும் பஸ் சேவை, அவிசாவளை வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.

06.அநுராதபுரம் – புத்தளம் மற்றும் குளியாப்பிட்டி ஊடாக நீர்கொழும்பு வழியாக கொழும்பிற்குள் பிரவேசிக்கும் பஸ் சேவை நீர்கொழும்பு வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.

07.தெற்கு அதிவேக வீதியூடாக பயணிக்கும் பஸ் சேவை கொட்டாவை வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.

08.அதிகாலை 4.30க்கு ஆரம்பிக்கப்படும் பஸ் சேவைகள், மாலை 6 மணிக்கு முதல் நிறுத்தப்பட வேண்டும்.

09.குறித்த பஸ் சேவைகள் நிறுத்தப்படும் இடம் வரையிலான பஸ் கட்டணத்தை மாத்திரமே அறவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்கள் தமது முடிவிடத்தை பஸ்ஸின் முன்பக்க கண்ணாடியில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என்பதுடன், ஒவ்வொரு பயணியும் கட்டாயம் முககவசத்தைஅணிந்திருத்தல் அத்தியாவசியமானதாகும்.

மேலும் பஸ்களுக்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்தின் காலஎல்லையை ஜுலை மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here