மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கியவர் . (இணை நிறுவனர்) உயிரிழந்தார்.

0
65

அமெரிக்காவின் தொழிலதிபரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவருமான பால் கார்டனர்(65)
இன்று உயிரிழந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 65.

இவர் அமெரிக்காவின்பெரும் தொழிலதிபர், முதலீட்டாளர், அறப்பணியாளர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் என பல பதவிகளை வகித்தவர்.

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பிறந்த பால் ஆலன் 14 வயதில் லேக்சைடு பள்ளியில் படிக்கும்போதுதான் தன்னைப் போலவே கம்ப்யூட்டரில் அடங்கா ஆர்வமும் திறனும் கொண்டிருந்த 12 வயது பில்கேட்ஸை சந்தித்தார். இருவரும் கல்லூரியில் படிப்பை நிறுத்திவிட்டு கம்ப்யூட்டருக்கு மென்பொருள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினர்.

இருவரும் இணைந்து 1975-ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தொடங்கினர். MS-DOS போலவே Q-DOS என்ற மென்பொருளைக் கண்டறிந்து, ஐபிஎம் நிறுவனத்தின் பி.சி. ஆபரேட்டிங் சிஸ்டத்தில் நிறுவினர். 1981-ல் இது வெளியானதில் இருந்து கணினிச் சந்தையில் அவர்களது வெற்றிக்கொடி பறக்கத் தொடங்கியது.

மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை தொழில்நுட்ப வல்லுநராக 1983 வரை இருந்தார். இந்நிறுவனத்தின் `ஐடியா மேன்’, `மேன் ஆஃப் ஆக்‌ஷன்’ என்று அழைக்கப்பட்டார். 30 வயது நிறைவடைவதற்குள் நிறுவனம் இவரை கோடீஸ்வரனாக்கிவிட்டது. புற்றுநோய் தாக்கியதால் நிறுவனத்தில் இருந்து விலகி சிகிச்சை பெற்றார். நோயை வெற்றிகண்டு மீண்டும் களமிறங்கி வல்கன் வெஞ்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஆனால், மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் தீவிர வாழ்க்கையில் இருந்து ஓய்வு எடுத்து வந்தார். தான் சம்பாதித்த பணத்தைச் சமூகத்துக்குத் திருப்பித்தர வேண்டும் என்ற உந்துதலில் உலகம் முழுவதும் பல நற்பணிகளைச் செய்துவந்தார்.

ஆப்ரிக்க நாடுகளில் எபோலோ நோய் பரவல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை இவர் வழங்கியுள்ளார். ‘ஐடியா மேன்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ள இவர் பல்வேறு விருதுகளைம் பெற்றுள்ளார்.

உலகத்தை இணையத்தால் இணைக்க ‘இண்டர்வெல் ரிசர்ச்’ நிறுவனத்தை தொடங்கினார். அவரின் சியாட்டி சீஹாக்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனத்தை வாங்கினார். உலகின் 7வது மிகப்பெரிய கேபிள் நிறுவனத்துக்கு சொந்தக்காரர் ஆவார்.

அவர் தொடங்கிய பால் ஜி ஆலன் ஃபேமிலி பவுண்டேசன் மூலம் கல்வி, அறிவியல், விளையாட்டு, தொழில்நுட்பம், வர்த்தகம் என பல துறைகளில் மக்களின் வளர்ச்சியை மேம்படுத்த தன் பணத்தை பயன்படுத்தினார்.
65 வயதில் மரணமடைந்த பால் ஆலன் 20.3 மில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மட்டும் 100 மில்லியன் பங்குகளை தன் வசம் வைத்துள்ளார்.



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here