இம்முறை ஹாஜ் கடமைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கான அறிவித்தல்கள் குறுந்தகவல்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய, கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
13282 வரையிலான பதிவிலக்கங்களைக் கொண்ட விண்ணப்பதாரிகள் இவ்வருட ஹாஜ் கடமைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய, கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேவேளை தெரிவு செய்யப்பட்டுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகளுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்குகளும், பயணத்தை உறுதி செய்யும் கடிதங்களைக் கையளிக்கும் நிகழ்வும் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


