இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவும்- சர்வதேச நாடுகளிடம் INGO கள் இணைந்து கோரிக்கை

0
19

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை சர்வதேச நாடுகள் வழங்க வேண்டும் என சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள 40ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து முன்வைத்துள்ள அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டபோதும் அது மிகவும் காலதாமதமான செயற்பாடாகவே அமைந்தது. பயங்கரவாதத்தை மீளப்பெற்றுக் கொள்வதாக அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறான நிலையில் 40வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் எழுத்துமூல அறிக்கையொன்றை முன்வைக்கவுள்ளார். இந்த அறிக்கையை சர்வதேச நாடுகள் வரவேற்பதுடன், அந்த அறிக்கையில் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனங்கள் கோரியுள்ளனLEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here