இந்தியாவின் விமானத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முஸ்தீபு

0
15

தனது எல்லைப் பரப்பைத் தாண்டி இந்தியாவினால் நேற்று (26) முன்னெடுக்கப்பட்ட விமானத் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடாத்துவதற்குப் பொருத்தமான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஜம்மு, காஷ்மீர் எல்லைப் புறத்திலுள்ள இந்திய பாதுகாப்பு இலக்குகளை நோக்கி நேற்றிரவு முதல் பாகிஸ்தான் இராணுவம் மோட்டார் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இந்திய பாதுகாப்புப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நேற்று இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் சுமார் 300 பேர் உயிரிழந்திருக்கலாம் என இந்திய பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய படையினரின் வாகன தொடரணி மீது புல்வாமா தற்கொலைத் தாக்குதலுக்கு பதிலடியாகவே நேற்றைய விமானத் தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் இந்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு உயிரிழப்புக்கள் தொடர்பான தகவலை மறுத்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவசர பாதுகாப்புக் குழுக் கூட்டத்தை கூட்டியுள்ளதாகவும், இந்தியாவின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடாத்துவது குறித்து இதில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாவும் பாகிஸ்தான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here