புதிய கோவிட் -19 வைரஸ் காரணமாக ஐக்கிய இராச்சியத்திலிருந்து
இலங்கைக்கு வருபவர்களின் பயணங்களுக்கு அரசாங்கம் அறிமுகப்படுத்திய தற்காலிக பயணக் கட்டுப்பாடு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சுகாதார அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மற்றும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்பட்டு இங்கிலாந்தில் இருந்து பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டது.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் அறிமுகப்படுத்திய வழிகாட்டுதலின் கீழ் இங்கிலாந்திலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையும் மீண்டும் தொடங்க உள்ளது.


