ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு உதவி புரிந்ததாக மத்ரஸா அதிபர் முகம்மத் ஷக்கீலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு.

0
0

ஈஸ்டர் ஞாயிறு தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சிஐடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை தண்டனை சட்டக் கோவை, பயங்கரவாத தடை சட்டம் மற்றும் ICCPR எனப்படும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ், குற்றவியல் சட்டக்கோவை விதிமுறைகள் பிரகாரம் நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புள டி லிவேரா பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு உதவி புரிந்ததாக மத்ரஸா அதிபர் முகம்மத் ஷக்கீலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சட்ட மா அதிபர்   தப்புள டி லிவேரா பொலிஸ் மா அதிபருக்கு
உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
PTA & section 3(1 )  ICCPR சட்டத்தின் கீழ், குற்றச்சாட்டுக்களில் ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவைத் தூண்டியதற்காக / உதவி புரிந்ததற்காகவே குறிப்பிட்ட மத்ரஸா அதிபர் முகம்மத் ஷக்கீலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here