எந்த விமர்சனங்கள் வந்தாலும் நான் எனது பாணியிலேயே வேலை செய்வேன் ; ஜனாதிபதி

0
0

யார் எந்த விமர்சனங்கள் முன்வைத்தாலும் தான்  தனது  பாணியிலேயே சேவையாற்றுவேன் என  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ கூறினார்.

 

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைய முன்னெடுக்கப்படும் கிராமத்துடனான சுமுகமான கலந்துரையாடல் என்ற வேலைத்திட்டத்தின் ஒன்பதாவது கட்டம் கேகாலை தெரணியகலை, திக்கெல்லகந்த வித்தியாலயத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றபோது அங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

நான் பனியாற்றுவது தொடர்பில் மக்கள் வைத்த நம்பிக்கை காரணமாகவே ஒரு பிரதேச சபை உறுப்பினர் கூட இல்லாத என்னை மக்கள் ஜனாதிபதி ஆக்கினார்கள். நான் நகர திட்டமிட்டமிடல் அமைச்சின் செயலாளராக இருந்த போது  கொழும்பு நகரை திட்டமிட்டு அபிருத்தி செய்தேன். அதனை மக்கள் கண்டார்கள். இன்று நான் பின் தங்கிய கிராமங்களுக்கு நேரில் செல்லும் போது சிலர் அதனை படம் காட்டுவதாக கூறுகிறார்கள்.எனக்கு அதுபற்று கவலை இல்லை.இன்னும் நான்கு வருடங்களிலேயே தேர்தல் நடைபெற உள்ளது.எனக்கு தேர்தலை இலக்கு வைத்து  படம் காட்ட வேண்டிய தேவை இல்லை.விமரசங்களை கண்டு எனது பாணியை நான் மாற்ற தேவையில்லை. எந்த விமர்சனங்கள் வந்தாலும் நான் எனது பாணியிலேயே வேலை செய்வேன் என ஜனாதிபதி கூறினார்.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here