தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் உறுப்பினர்களாக இருவர் தெரிவு.

0
1

பீ. எம்.றியாத்,எம்.என்.எம்.அப்ராஸ்
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அம்பாறை மாவட்டத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் பிரதிநிதியாக  சாய்ந்தமருதை சேர்ந்த  ஏ.ஏ.எம்.ஏ.சிப்னாஸ் மற்றும்  உகன பிரதேசத்தை ஜி.எச்.சந்தன பீரீஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 
 அம்பாறை மாவட்ட இளைஞர் கழக சம்மேளன புதிய நிர்வாக தெரிவுக்கூட்டம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் மாவட்ட காரியாலய கூட்ட மண்டபத்தில்  இடம்பெற்ற போது இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
 
தேசிய இளைஞர் கழக சம்மேளனத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான ஒன்றுகூடல் இவ் மாதம் 20ம் திகதி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here