கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்ட “காஷ்மீர் நட்புறவு தினம்”

0
0

ஒற்றுமையை வெளிப்படுத்தவும், சுயநிர்ணய உரிமைக்கான

 

போராட்டத்தில் காஷ்மீரிகளுக்கு பாகிஸ்தானின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவும் “காஷ்மீர் நட்புறவு தினம்” கொழும்பில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் இன்று (05/02/2021) அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் , பெரும் தொகையான பாகிஸ்தான் சமூகத்தினர் , காஷ்மீர் நலன் விரும்பிகள், உள்ளூர் பத்திரிகையாளர்கள் மற்றும் இராஜதந்திரிகள் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் முக்கிய பேச்சாளர்களான திரு முஹம்மது ஷிராஸ் யூனஸ் மற்றும் கலாநிதி அசேல விக்ரமசிங்க கலந்து சிறப்பித்தனர்.
இவ்விருவரும் தமது உரைகளில், காஷ்மீர் பிரச்சினைக்கான அமைதியான தீர்வை வலியுறுத்தியதோடு இடைக்கால நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்துவம் மற்றும் அனைவரினதும் அமைதியான சகவாழ்வுவின் அவசியத்தையும் வலுயுறுத்தினர்.
பாகிஸ்தான் பிரதி உயர் ஸ்தானிகர் தனது உரையில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் மற்றும் மக்களின் காஷ்மீர் மீதான நம்பிக்கையை வலியுறுத்தினார்.
பாகிஸ்தான் எப்போதும் தங்கள் காஷ்மீர் சகோதர சகோதரிகளுடன் தோளோடு தோள் நிற்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பான ஜம்மு காஷ்மீர் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய துருப்புக்களின் கொடூரமான வன்முறைக்கு உட்பட்டுள்ளது என்றும், முழு உலகமும், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையும் இந்த மனித உரிமை மீறல்களை எதிர்த்து குரல் எழுப்பவேண்டும் எனவும் தெரிவித்தார்.இறுதியாக, சிறப்புப் பேச்சாளர்களுக்கு தமது நன்றியிணையும் தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.
இந் நிகழ்வில், வர்த்தக மற்றும் முதலீட்டு இணைப்பாளர் மற்றும் ஊடக இணைப்பாளர் முறையே ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமரின் காஷ்மீர் ஒற்றுமை தின செய்திகளை வாசித்தனர்.
இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் மனித உரிமை மீறல்களை சித்தரிக்கும் படக்கண்காட்சியும் இந்நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here