மியன்மாரில் இராணுவத்தினரிற்கு எதிரான எதிர்ப்பு தீவிரமடைகின்றது… ஆங் சாங் சூசிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களில் மக்கள்.

0
3

மியன்மாரில் இராணுவத்தினரின் சதிப்புரட்சிக்கு எதிராக மக்களின்

 

ஒத்துழையாமை இயக்கம் தீவிரமடைகின்றது.
இராணுவத்தினரின் நடவடிக்கைகளிற்கு எதிராக ஆசிரியர்களும் மாணவர்களும் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை தலைநகர் யங்கூனில் உள்ள டகோன் பல்கலைகழகத்திற்கு வெளியே மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்கள் மியன்மார் இராணுவத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளியிடுவதற்கு பயன்படுத்தும் மூன்றுவிரல் சமிக்ஞையை காண்பித்தவாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் சூகியிற்கு தங்கள் ஆதரவை வெளியிட்டதுடன் அவரின் கொடியை காண்பித்தவாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் எமது மக்கள் நெருக்கடிகளை சந்திப்பதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.
மியன்மார் அரசாங்கம் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் அரசியல் சகாக்கள் உட்பட பலரை கைதுசெய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
தடுத்துவைக்கப்பட்டுள்ள மியன்மார் தலைவர் ஆன் சாங் சூசியின் முக்கிய சகா உட்பட 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சூசியின் நெருங்கிய சகாவான 79வயது வின்டெயின் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாங்கள் மிகநீண்டகாலமாக மோசமாக நடத்தப்பட்டுள்ளோம் என அவர் கைதுசெய்து அழைத்துச்செல்லப்படும்வேளை தெரிவித்துள்ளார்.
நான் ஒருபோதும் இவர்களை பார்த்து அஞ்சியதில்லை நான் ஒருபோதும் தவறிழைத்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here