விபத்துக்குள்ளான வேனில் இருந்தவர்களுக்கு வைத்தியசாலையில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி .

0
1

சாரதி உறங்கியதன் காரணமாக பொல்கஹாவெல, பந்தாவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளான

வேனில் இருந்த இருவர் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

 

http://www.ada.lk/breaking_news/%EF/11-374281

கொழும்பில் இருந்து குருணாகல் நோக்கி சென்ற வேன் ஒன்று நேற்று அதிகாலை 6.30 அளவில் பொல்கஹாவெல பந்தாவ பிரதேசத்தில் இருக்கும் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றுக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

சாரதி உறங்கி போனதால், வான் வீதியை விட்டு விலகி புரண்டுள்ளது. இதில் பயணித்த நான்கு பேர் காயமடைந்த நிலையில், பொல்கஹாவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

அங்கு காயமடைந்தவர்களுக்கு நடத்தப்பட்ட ரெபீட் அன்டிஜன் பரிசோதனையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதியானது என பொல்கஹாவெல பொது சுகாதார பரிசோதகர் மஹேஸ் அமாகர தெரிவித்துள்ளார்.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here