துபாயில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வெளிநாட்டவருக்கு ஆயுள் தண்டனை.

0
1

ஐக்கிய அரபு இராஜ்ஜிய துபாய் நகரில் விற்பனையாளராக
 (salesman) பணிபுரிந்து வந்த 23 வயது நிரம்பிய இந்தியர் ஒருவர் 39 வயது நிரம்பிய இந்தியப் பெண் ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக டுபாய் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 2020 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் துபாயின் நைஃப் பகுதியில் வசிக்கும் 39 வயது நிரம்பிய இந்தியப் பெண் ஒருவர் தனது மகனை வீட்டுக்கு வெளியே உள்ள பள்ளி பேருந்து தரிக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று பேருந்தில் ஏற்றி விட்டு மீண்டும் வீடு வந்த போது குறித்த நபர் அப் பெண்னை இழுத்துப் பிடித்து தொண்டையில் கத்தியை வைத்து பயமுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தெரிவிக்கையில், எனது மகனை நான் பாடசாலை பேருந்தில் ஏற்றி விட்டு மீண்டும் வீட்டுக்கு வரும் போது என்னை வழி மறித்த ஒருவர் என் கழுத்தின் தொண்டைப் பகுதியில் கத்தியை வைத்து மிரட்டி என்னை என் வீட்டுக்குல் தள்ளி கதவை மூடிவிட்டு முதலில் என் ஆடைகளை கழையச் செய்து என்னை அவரது தொலைபேசியில் படம் பிடித்து பின்னர் வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார், நான் பயத்தில் பல முறை கூக்குரல் இட்டு கத்தியும் யாருக்கும் அது கேட்கவில்லை, யாரும் உதவிக்கு வரவுமில்லை.
குடி போதையில் இருந்த அவர் என்னை பலாத்காரம் செய்து விட்டு பொலிஸில் முறையிட்டால் வீடியோவினை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டி என்னிடம் இருந்த 200 திர்ஹம் பணத்தையும் திருடிச் சென்றதோடு, பல நாட்களாக என்னைக் கண்காணித்து நோட்டமிட்டதாகவும் தன்னிடம் தெரிவித்ததாக அப் பெண் டுபாய் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
முறைப்பாடு அளிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குல் டுபாய் பொலிசார் குற்றவாளியைக் கைது செய்து விசாரனை செய்ததில் குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர்மீது கற்பழிப்பு, கொள்ளை மற்றும் சட்டவிரோதமாக மது அருந்துதல் போன்றவற்றின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here