ஹர்திக், குருணால் பாண்டியாவின் தந்தை காலமானார்

0
1

தந்தையுடன் ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா

இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குருணால் பாண்டியா ஆகியோரின் தந்தை ஹிமான்ஷு மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட பல்வேறு வீரர்கள், கிரிக்கெட் சங்கத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குருணால் பாண்டியா தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பரோடா அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய குருணால், 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அவரது தந்தை மறைவுக்கு பரோடா அணி இரங்கல் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று நாடு திரும்பிய ஹர்திக், குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். தனது உடற்தகுதிக்காகவும் பயிற்சி செய்து வந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறந்த வீரருக்கான விருதை பெற்றிருந்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here