இரண்டு புதிய வயோ லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்

0
0

இந்தியாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க இரண்டு புதிய லேப்டாப்களை வயோ பிராண்டு அறிமுகம் செய்து இருக்கிறது. இவை வயோ இ15 மற்றும் வயோ எஸ்இ14 லேப்டாப் என அழைக்கப்படுகின்றன.
இரண்டு புதிய வயோ லேப்டாப் மாடல்களிலும் ஃபுல் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365, விண்டோஸ் 10 ஹோம் எடிஷன், டால்பி ஆடியோ மற்றும் ஸ்மார்ட் ஆம்ப்ளிபையர் வசதி கொண்ட ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
 வயோ லேப்டாப்
வயோ எஸ்இ14 ஏற்கனவே மலேசியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் தற்சமயம் அவிட்டா நோட்புக் மாடல்களை விற்பனை செய்யும் நெஸ்ட்கோ நிறுவனம் தான் வயோ பிராண்டை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வந்து உள்ளது.
இரண்டு புதிய வயோ லேப்டாப்களும் இந்திய சந்தையில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. வயோ இ15 மாடல் பிளாக் மற்றும் டின் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த லேப்டாப் மாடல் விலை ரூ. 66,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வயோ எஸ்இ14 மாடல் டார்க் கிரே மற்றும் ரெட் கூப்பர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 84,690 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இரு வயோ லேப்டாப்களின் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here