ஸ்மார்ட்போன் விலையை மீண்டும் குறைத்த ஒப்போ

0
0

ஒப்போ நிறுவனம் தனது ஏ12 ஸ்மார்ட்போனின் விலையை மீண்டும் குறைத்து இருக்கிறது. விலை குறைப்பு சில்லறை விற்பனை மையங்களில் அமலாகி இருக்கிறது. அந்த வகையில் ஆன்லைன் தளங்களில் இதன் விலையில் இதுவரை எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்தியாவில் ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ. 9990 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இதன் விலை ரூ. 1000 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 8990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் விலை குறைப்பின் படி ஒப்போ ஏ12 (3 ஜிபி + 32 ஜிபி) மாடல் ரூ. 8490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ரூ. 10,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
 ஒப்போ ஏ12
சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது சென்சார், 5 எம்பி செல்பி கேமரா, கைரேகை சென்சார்,  ஆண்ட்ராய்டு 9 சார்ந்த கலர்ஒஎஸ், 4230 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here